அகில இந்திய வேளாண் போக்குவரத்து தகவல் அழைப்பு மைய வசதி
April 20 , 2020 2031 days 859 0
அகில இந்திய வேளாண் போக்குவரத்து தகவல் அழைப்பு மைய வசதியை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது அறிமுகப் படுத்தி உள்ளது.
இந்த வசதியானது மாநிலங்களுக்கு இடையில் அழுகக் கூடிய பொருட்களின் போக்குவரத்து இயக்கத்தை மேற்கொள்ள உதவும்.
இந்தத் தகவல் அழைப்பு மையங்களை IFFCO (இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு நிறுவனம்) கிசான் சஞ்சார் லிமிடெட் நிறுவனமானது இயக்க உள்ளது.
IKSL நிறுவனமானது இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் மற்றும் ஸ்டார் குளோபல் ரிசோர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களால் இணைந்து ஊக்கமளிக்கப் படுகிறது.
இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு லிமிடெட் நிறுவனமானது 1967 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நாட்டின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கமாகும்.